கேரளா: நடிகர் விஜய் மீது வழக்கு

sarkar-smoதிருவனந்தபுரம், நவ.14:சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு கேரளாவில் எதிர்ப்பு தெரிவித்து திருச்சூரில் சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திரையரங்க உரிமையாளர் திருச்சூர் ராம்தாஸ் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • |
  • One thought on “கேரளா: நடிகர் விஜய் மீது வழக்கு

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *