கள்ளகுறிச்சி அருகே லாரி- பஸ் விபத்து: சென்னையை சேர்ந்த 3 ஐயப்ப பக்தர்கள் பலி

-->

விழுப்புரம், டிச.31: கள்ளக்குறிச்சி அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  கோயம்பேடு பாடிகுப்பம் பெரியார் தெருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்றிரவு ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சரபி மலைக்கு சென்றனர். அதிகாலை ஒரு மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி-சேலம் புறவழிச்  சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. பந்தாரம் என்ற […]

திருமங்கலம்: பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது

-->

  சென்னை, டிச.31: திருமங்லம் பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு, பார்க் ரோடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் வரதராஜன் (46), இவரது மனைவி கிருத்திகா (38).  இவர் கடந்த 10.6.2016 அன்று இரவு சுமார் 07.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள கடைக்கு சென்று பழம் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் […]

கோயம்பேட்டில் போதை பாக்கு விற்பனை: 2பேர் கைது

-->

  சென்னை, டிச.31 கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் போதை பாக்கு விற்பனை செய்ததாக 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகளான பான் மசாலா, குட்கா, மற்றும் ஹான்ஸ் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மார்கெட் பகுதியில் கோயம்பேடு போலீஸ் […]

பூட்டிய வீட்டில் திருடிய வாலிபர் கைது

-->

  சென்னை,டிச.30:   சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் செந்தில் குமார் (38).. இவர் கடந்த 28 ம் தேதி அன்று  இரவு தனது வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். மறுநாள்  காலை  வீட்டிற்கு வந்த செந்தில்குமார் பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த பணம் ரூ.10 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.  இது தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

புத்தாண்டு கொண்டாட்டம்:   பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

-->

  சென்னை, டிச.29: இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் கடல் நீர் அருகே செல்லக் கூடாது.  இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புத்தாண்டு வாழ்த்து கூறுவதன் பேரில் பெண்களை கேலி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.  விரும்பத்தகாத […]

புத்தாண்டு கொண்டாட்டங்கள்: நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு

-->

  சென்னை. டிச.29:   சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தென்சென்னை கூடுதல் கமிஷனர் சங்கர், தென்சென்னை இணை கமிஷனர் அன்பு, சென்னை கிழக்கு இணை கமிஷனர் மனோகரன் மற்றும் உயர் […]

பாலியல் தொழில் : ஒரு பெண் உட்பட 4 பேர் கைது

-->

  சென்னை, டிச.29 சென்னையில் கடந்த 5 நாட்களில் 3 இடங்களில் பாலியல் தொழில் நடத்திய ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:   விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த 24 ம் தேதி வில்லிவாக்கம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, கிடைத்த தகவலின் பேரில் வெங்கடேச தியாகராய நகர் பகுதியில் உள்ள கடையில் போலீசார் நடத்திய சோதனை.யில் பாலியல் தொழில் […]

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு    

-->

 சென்னை, டிச.29:  சென்னை அயனாவரத்தில் இன்று காலை வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் 5 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினர். சென்னை அயனாவரம், ஏழுமலை தெருவை சேர்நதவர் லட்சுமி (வயது 60). இவர் தினமும் காலையில் வாக்கிங் போவது வழக்கம். இந்த நிலையில் இன்றும் வழக்கம் போல் தனது தோழியுடன் வீட்டுக்கு அருகே உள்ள சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் தெருவில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. இதை பயன்படுத்திக்கொண்ட 2 மர்ம நபர்கள் […]

3 வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

-->

  சென்னை, டிச.29:  சென்னை, பிராட்வே  மெயின் ரோட்டில் வசித்து வருபவர்  அலி ஆஸ்கர். இவர் இரும்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவர் குடியிருக்கும் வீடு 7 மாடி கொண்டது. இதில் 3-வது மாடியில் இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் கதிஜா (வயது 4). அவரது குடியிருப்பின் எதிரே சர்ச் ஒன்றுஉள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டை யொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. அதையொட்டி நேற்று மாலை  5.30 மணியளவில்  அங்கு ஆடல் […]

செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

-->

  சென்னை, டிச.27: மாதவரத்தில் செல்போன் வாங்குவது போல நடித்து செல்போனை அபகரித்து சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:   கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்           ரஞ்சித்குமார் (31).  இவர் தன்னுடைய 40,000  ரூபாய் மதிப்புள்ள செல்போனை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த மனோஜ் (எ ) ஃப்ரெட்ரிக் (20)  மற்றும் மோத்தீஸ்வரன் (21), ஆகிய 2 பேர் ரஞ்சித்குமாரின் செல்போன் எண்ணுக்கு […]