பழ வியாபாரி வீட்டில் 69 சவரன் நகை கொள்ளை

-->

  சென்னை, ஜன. 30. நள்ளிரவில் பழவியாபாரி வீட்டில் உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதிலிருந்து 69 சவரன் நகையை கொள்ளைடித்துச்சென்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சின்மையா நகர், குமரன் நகரைச்சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42).இவர் கோயம்பேடு  மார்க்கெட்டில் மொத்தமாக பழவியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கு 3 மாடி வீடு உள்ளது. நேற்றிரவு இவர் குடும்பத்துடன் வீட்டின் கீழ்தளத்தில் தூங்கியுள்ளார். அப்போது மர்ம ஆசாமிகள் அவரது வீட்டின் முதல் மாடி பால்கனியில் உள்ள […]

சென்னை: 2 இடங்களில் பூட்டை உடைத்து 135 சவரன் திருட்டு

-->

  சென்னை, ஜன.29: சென்னை புற நகர் பகுதியில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 135 சவரன் தங்க நகை மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவரமாக தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (49) . மயிலாப்பூரில் பேன்சி கடை வைத்துள்ளார். இவர் நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு  இரவு […]

துப்பாக்கி முனையில் அடகு கடைக்காரர் வீட்டில் கொள்ளை முயற்சி: வட மாநில ஆசாமி கைது

-->

  சென்னை, ஜன.29: ஐஸ் ஹவுஸ் ஜானிஜான் கான் சாலையில் வசிப்பவர் முன்னா லால் (43).இவர் சொந்தமாக அடகு கடை வைத்துள்ளார்.கடையும் வீடும்ஒரே கட்டிடத்தில் உள்ளன. இன்று காலை 10.30 மணியளவில் இவர் வீட்டுக்கு மூன்று பேர் வந்துள்ளனர்.நகைகளை அடகு வைப்பது போல் முன்னா லாலிடம் பேசியுள்ளனர். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டி முன்னா லாலை மிரட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த வேலைக்காரி வனிதா சத்தம் போட முயலவே  3 பேரில் ஒருவன் அவரது வாயினுள் […]

எம்.கே.பி நகர்:  வன்முறையில் ஈடுபட்ட 8 பேர்  கைது

-->

  சென்னை, ஜன.29:   கடந்த 23.01.2017 சென்னையில் பல்வேறு இடங்களில் மர்ம கும்பல் சிலர் கூட்டாக சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். மேலும், அவ்வழியே சென்ற அரசு பேருந்துகள், அரசு வாகனங்கள், காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியும், தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதே போன்று எம்.கே.பி நகர் இ.எச் சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் டாஸ்மாக் கடையை சேதப்படுத்தி […]

சூதாட்டம்: 7 பேர் கும்பல் கைது

-->

  சென்னை, ஜன.29:   கொருக்குப்பேட்டை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியிலிருந்தபோது, மேற்கு கே.ஜி கார்டன் இரண்டாவது தெருவில் உள்ள லாரி புக்கிங் ஆபிஸில் சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சோதனை நடத்திய போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ.2,340/- மற்றும் சீட்டுகட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்பேடு: செல்போன் திருடிய 2 பேர் கைது

-->

  சென்னை, ஜன.29:   கோயம்பேடு போலீசார் நேற்று மார்க்கெட்  பகுதியில்   ரோந்து பணியிலிருந்து போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சந்தேகத்தின் பேரில்  விசாரணை செய்தபோது, இருவரும் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வர்கள் என்பது தெரியவந்தது. அதன்பேரில் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் பிடிப்பட்ட  நபர்கள் கார்த்திக் (19),  மற்றும் மணிகண்டன்(எ) புறா மணி (19)  என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.     மேலும் […]

சென்னை: வன்முறையில் ஈடுபட்ட பெண் உட்பட 22 பேர் கைது

-->

  சென்னை, ஜன.28:     கடந்த 23 ம் தேதி சென்னையில் பல்வேறு இடங்களில் மர்ம கும்பல் சிலர் கூட்டாக சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். மேலும், அவ்வழியே சென்ற அரசு பேருந்துகள், அரசு வாகனங்கள், காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியும், தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களில் தற்போது வடபழனி, எழும்பூர், எம்.கே.பி.நகர் மற்றும் வேப்பேரி ஆகிய பகுதிகளில் கலவரம் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 22 பேர் கைது […]

வீடு புகுந்து திருட்டு: 2 பேர் கைது

-->

  சென்னை, ஜன.28   பூந்தமல்லி, சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம், பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 06.15 மணியளவில் இவரது தந்தை கண்ணன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென சத்தம் கேட்டுள்ளது. அவர் எழுந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முயன்றனர். கண்ணன் உடனே சத்தம் போட்டுக் கொண்டே அவர்களை துரத்தியபோது, அவ்வழியே ரோந்து பணியிலிருந்த பூந்தமல்லி காவல் நிலைய போலீசார் […]

செங்குன்றம்:  ஆட்டோ திருடியவர் கைது

-->

    சென்னை, ஜன.25: சென்னை, புதூர், கோவத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (40).. இவர் சொந்தமாக டாடா ஏஸ் ஆட்டோவைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது ஆட்டோவை செங்குன்றம், பெரியார் நகர் பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு திரும்ப வந்து பார்த்த போது ஆட்டோ திருடுபோயிருந்த்து தெரியவந்தது. இது குறித்து அவர் செங்குன்றம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு […]

போலீஸ் அதிகாரி வீட்டில் நகை திருட்டு:  வேலைக்கார பெண் கைது

-->

  சென்னை, ஜன.25:   குரோம்பேட்டை, சோழவரம் நகர், தந்தை பெரியார் தெருவில்  வசித்து வருபவர் வெங்கட்டம்மா (54).  இவர் சென்னை காவல்துறையில் பெண் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் விஜயகுமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம்  அலுவலகத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணபுரிந்து வருகிறார். வெங்கடம்மா கடந்த 23ம் தேதி இரவு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நகையை சரிபார்த்தபோது, அவர் பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை காணவில்லை. வீட்டில் பல […]