கார் பந்தயம் : 10 சொகுசு கார்கள் பறிமுதல்

-->

சென்னை, பிப்.27: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டு அதிகவேகமாகச் சென்றதாக 9 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கானத்தூர் அருகே போக்குவரத்து போலீஸார் நேற்று காலை 5.45 மணியளவில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 15 சொகுசுக் கார்கள் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து சென்றன. போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அவையனைத்தும் நிற்காமல் வேகமாகச் சென்றன. அதில் ஒரு கார் கானத்தூர் போக்குவரத்து காவல் […]

வாலிபர் குத்திக்கொலை: தாய்மாமன் கைது

-->

சென்னை, பிப்.27: சீட்டு கட்டிய பணத்தை கேட்ட அக்காள் மகனை அடித்துக் கொன்ற தாய்மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். . இந்த துயர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொருக்குப்பேட்டை ஜீவா நகரைச்சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 24). தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். திருமணமாகவில்லை. இவரது தாய் பிரமோ . இவரது தம்பி சீனிவாசன். சீனிவாசனிடம் பிரேமா சீட்டு கட்டிவந்துள்ளார். பின்னர் கெடுமுடிந்தும் சீட்டுக்கட்டிய பணத்தை சீனிவாசன் தரவில்லை என்று கூறப்படுகிறது […]

2 வீடுகளில் பூட்டை உடைத்து 46 சவரன் கொள்ளை

-->

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தசரதபுரம் அப்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் இவர் அப்பகுதியில் உள்ள 2 அடுக்கு குடியிருப்பில் தரைத்தளத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லைக்கரசி. இவர் நட்சத்திர உணவகங்களில் நடக்கும் நிகழச்சிகளில் பாடல் பாடுபவர். இவர்கள் நேற்று குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு 12 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளர். அப்போது அவர்கள் வீட்டின் பின் வாசல் […]

போலி சான்றிதழ்கள் ரூ. 1000 க்கு விற்பனை: 2 பேர் கைது

-->

சென்னை, பிப்.22 போலிசான்றிதழ்களை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் சந்திரசேகர் என்ற சந்திர காந்த். இவர் தனது தந்தையின் இறப்பு சான்றிதழை எம்.ஜி.ஆர் நகர் தாலுக்கா அலுவவலகம் அருகில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த சான்றிதழை மாம்பலம் தாசில்தார் மகராஜனிடம் காண்பித்துள்ளார். அதில் தனது கையெழுத்தை போலியாக போட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து தாசில்தார் மற்றும் சந்திரகாந்த் […]

சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது: 50 சைக்கிள்கள் மீட்பு

-->

சென்னை, பிப்.22: சென்னை அசோக்நகரை சேர்ந்த ராஜன் என்பவரின் சைக்கிளை கடந்த 11ந்தேதி மர்ம நபர்கள் திருடிவிட்டனர். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் துணை ஆணையர் சரவணன் அறிவுரைப்படி அசோக்நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் சைக்கிள் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அசோக் நகரில் பதிவான சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது எர்ணாவூர் 47பிளாக் பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 39), மணலி […]

கத்தி முனையில் வழிப்பறி: 4 பேர் கைது

-->

சென்னை, பிப்.22: கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுக்கா, இரும்புகுறிச்சியை சேர்ந்தவர் ஜான்சன் அந்தோணி (23). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்ஷனில் தங்கிஉள்ளார். ஜான்சன் கடந்த 20 ம் தேதி சொந்த வேலையாக சென்னை எண்ணூர் பகுதிக்கு சென்று வேலையை முடித்துவிட்டு, அன்று இரவு பேருந்தில் திருவல்லிக்கேணிக்கு திரும்பினார் வழியில் யானைகவுனி, பகுதியில் இறங்கினார். அப்போது யானைகவுனி பாலம், எம்.ஜி.ஆர்.சிலை அருகில் நின்றுக்கொண்டிருந்த 4 பேரிடம் திருவல்லிக்கேணிக்கு […]

எண்ணூர்: 3 வயது சிறுமி கடத்தி கொலை: பெண் கைது

-->

சென்னை, பிப்.20: எண்ணூர், சுனாமி குடியிருப்பு 26-வது பிளாக்கில் வசித்து வருபவர் பழனி. இவரது மகள் ரித்திகா (3). நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த ரித்திகா திடீரென மாயமானாள். இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர், மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தாள். அவளது வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு இருந்தது. வாயும் துணியால் கட்டப்பட்டு காணப்பட்டது. சிறுமி கொலையுண்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொது […]

கோயம்பேடு: மது பாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது

-->

சென்னை, பிப்.15: கோயம்பேடு போலீசார், இன்று காலை கோயம்பேடு, மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, பூ மார்க்கெட் பின்புறம் உள்ள பகுதியில் இரண்டு பெண்கள் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரண்டு பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்களது பெயர் கண்ணகி (54) மற்றும் தேவி (38) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.5,500 மற்றும் 180 மில்லி அளவுள்ள 19 மதுபானபாட்டில்கள் பறிமுதல் […]

திருவொற்றியூர்: குடிபோதையில் 3 பேரை கத்தியால் தாக்கிய 2 பேர் கைது

-->

சென்னை,பிப்.15 சென்னை, திருவொற்றியூர், வடக்கு மாட வீதியை சேர்ந்தவர், கார்த்திக்கேயன் (23), இவரும், அம்சா தோட்டம் 2வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (19), நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு சின்ன மேட்டுப்பாளையம், சென்னியம்மன் கோயில் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே 3 இருசக்கர வாகனத்தில் சென்ற 6 பேர் சத்தம் போட்டுக் கொண்டும், அதிவேகமாகவும் சென்றபோது, ஏன் இவ்வாறு வேகமா செல்கிறீர்கள் என கார்த்திக்கேயன் கேட்டுள்ளார். அப்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கார்த்திக்கேயனை தகாத […]

கப்பலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

-->

மும்பை, பிப்.11: மகாராஷ்டிரா மாநிலத்தில் மலபார் ஹில் பகுதியிலிருந்து 4 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் நேற்று, தானியக் கிடங்கை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வெகு நேரமாகியும் தொழிலாளர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த கடற்படையைச் சேர்ந்தவர்கள் கிடங்கின் உள்ளே பார்த்தபோது, அங்கு, தொழிலாளர்கள் மயங்கிக் கிடந்துள்ளனர் அந்த தொழிலாளர்களை மீட்ட கடற்படையை சேர்ந்தவர்கள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட […]