ஆசிய விளையாட்டுப் போட்டி: 8 வது இடத்தில் இந்தியா

-->

ஜாகர்த்தா, ஆக.30: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தமிழக வீரர்கள் அய்யாச்சாமி, தருன் ஆரோக்கிய ராஜ் உள்பட 4 பேரை உள்ளடக்கிய இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதகத்தை வென்றது. முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா […]

மின்சார ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி

-->

சென்னை, ஆக. 30: சேத்துப்பட்டு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் மீது மின்சார ரயில் மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை கடற்கரையிலிருந்து – தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதி தூக்கி வீசியடித்தது.இதில், அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாயினர். இது குறித்த தகவலின்பேரில், எழும்பூர் […]

சென்னை: 7-வது மாடியில் இருந்து விழுந்து குழந்தை பலி

-->

சென்னை, ஆக.30: சூளைமேட்டில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சூளைமேட்டில் உள்ள 7 அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபால். இவர் அந்த குடியிருப்பின் நிர்வாக அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சாரதா (வயது 4) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை 6.45 மணி அளவில் வீட்டில் அந்த குழந்தையின் […]

சென்னை: பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் ரகளை

-->

சென்னை, ஆக. 30: சென்னையில் மாநகரப் பேருந்தின் படியில் நின்றுக்கொண்டு பட்டாக்கத்தியை சாலையில் உரசியபடி பயணம் செய்தது தொடர்பாக, கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரனோடையில் இருந்து பிராட்வே வரை செல்லும் 54 எஃப் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள், சத்தம் எழுப்பிக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்துள்ளனர். மேலும், பேருந்து படியில் நின்றபடி பட்டாக்கத்திகளை கையில் பிடித்துகொண்டு சாலையில் உரசியபடியே சென்றுள்ளனர். இது பயணிகளிடையே […]

சென்னை: ஐ.டி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

-->

சென்னை, ஆக.29:  சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டை அலுவலக கிளை, சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலக கிளைஆகிய இடங்களில்  இந்த சோதனை நடந்தது. பெங்களூர் வருமான வரித்துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகங்களில் உள்ள முக்கியமான ஆவணங்களை […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

-->

புது டெல்லி,ஆக.29: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  2 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு […]

சென்னை: 3 இடங்களில் செல்போன் பறிப்பு

-->

சென்னை, ஆக.29: சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் தனவேல் (வயது 41). இவர் ஜானிஜான்கான் ரோட்டில் பிரிண்டிங் ப்ரஸ் வைத்துள்ளளார். இந்த நிலையில், மயிலாப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது பைக்கில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பீட்டர்ஸ் ரோடு போஸ்ட் ஆபிஸ் அருகே பைக்கில் வந்த 2 பேர் சட்டையின் மேல் பாக்கெட்டில் வைத்திருந்த இவரது செல்போனை லவகமாக […]

என்டிஆரின் மகன் சாலை விபத்தில் பலி

-->

ஐதராபாத், ஆக.29: என்டி ராமாராவ் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆர் தந்தையுமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஹரிகிருஷ்ணா நடிகர் ஜூனியர் என்டி ஆரின் தந்தையாவார். இவர் கட்சி பொதுக் கூட்டத்துக்காக நல்கொண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளி-அட்டங்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த […]

சென்னை : மோதினார் கொலையில் திடுக் தகவல்

-->

சென்னை, ஆக.29:திருவல்லிக்கேணியில் மோதினார் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாத்தியா ஓத வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் 3 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பென்சினஸ் முதல் தெருவில் வசித்து வந்தவர் சையத் பஸ்ருதீன் என்ற பாபு பாய். இவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் முஸ்வி பிளாசா என்ற வணிக கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் […]

போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் சாவு

-->

சென்னை, ஆக.29: திருவேற்காட்டில் உள்ள காவல் நிலையம் நிலைய வளாகத்தில் தீக்குளித்த நர்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காடு கோலடி பகுதியில் உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 40). இவர் கடைகளுக்கு பிஸ்கட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (வயது […]