14 துணை மின்நிலையங்கள், மேம்பாலங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

-->

சென்னை, அக்.31: புதிதாக கட்டப்பட்ட போலீஸ், தீயணைப்பு நிலையம், 14 துணை மின்நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 16 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தேனி மாவட்டம்- தப்புக்குண்டுவில் […]

பட்டாசு வெடிக்க புதிய உத்தரவு

-->

புது டெல்லி, அக். 31: தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரமும், இரவு ஒருமணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசு வெடிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த […]

வடகிழக்கு பருவமழை துவக்கம்

-->

சென்னை, அக்.31:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கும் என்று பிரபல வானிலை நிபுணர் பிரதீப் ஜான் இன்று தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று அவர் கூறியிருக்கிறார். சென்னையை பொறுத்தவரை இன்று காலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று […]

தீபாவளி சிறப்பு போருந்துகள் முன் பதிவு தொடக்கம்

-->

சென்னை, அக்.31:தீபாவளியையொட்டி 20,567 சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்தார். தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 20000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகளினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று சென்னையில் துவங்கி வைத்தார். இந்த சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து அமைச்சர் தெரிவிக்கையில், நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11,367 சிறப்பு பேருந்துகள், மற்ற மாவட்டங்களில் இருந்து […]

இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை

-->

சென்னை, அக்.31: இசை நிகழ்ச்சிகளில் என் பாடல்களை அனுமதியில்லாமல் பாட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில், அது குறித்து தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசையமைப்பாளர் இளையராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நான் 2014-ஆம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அந்த தீர்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. 2010-ம் […]

ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை: மேலும் 5 பேர் கைது

-->

சென்னை, அக்.30: ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வட மாநில கொள்ளையர்கள் மேலும் 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் இணைக்கப்பட்டிருந்த பெட்டியில் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ.342 கோடி பணம் கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் சென்னை எழும்பூரை அடந்தபோது அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை போட்டு ரூ. 5.78 […]

தமிழகத்தில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி

-->

புதுடெல்லி, அக்.30: தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு உச்ச […]

பாலியல் புகார்களை விசாரிக்க ‘விசாகா’ குழு: நடிகர் சங்கம்

-->

சென்னை, அக்.30: திரைப்படத் துறையில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அங்கத்தினர்களுடைய உரிமைகளும் சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ‘விசாகா குழு’ செயல்படும் சட்டங் களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும். இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட, குழுவாக அமையும். […]

3 வயது சிறுவன் கடத்தல்: 2 பெண்கள் கைது

-->

சென்னை, அக். 30: புளியந்தோப்பு அருகே உறவினர்கள் என்றுகூறி, பள்ளியில் இருந்து 3 வயது சிறுவனை கடத்தி சென்ற பெண்கள் 2 பேரையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். சில மணிநேரத்திலேயே சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். சென்னை புளியந்தோப்பு, போகி பாளையம் பகுதியில் வசித்துவருபவர்கள் பிரகாஷ் – துர்கா தேவி தம்பதியினர். இவர்களின் 3-வயது மகன் அஜய் மணிகண்டன், புளியந்தோப்பில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்துவருகிறான். இந்த நிலையில், பள்ளி […]

சர்கார் படத்தின் கதை: இயக்குனர் ஒப்புதல்

-->

சென்னை, அக்.30: சர்கார் படத்தின் கதை எழுத்தாளர் வருண் ராஜேந்திரனுடையது தான் என்பதை இயக்குனர் முருகதாஸ், படத் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர். படத்தில் வருண் ராஜேந்திரன் பெயர் இடம்பெறுவதற்கு இயக்குனரும், பட நிறுவனமும் ஒத்துக்கொண்டதை அடுத்து சர்கார் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தின் கதை, திரைக் கதை தன்னுடையது எனக் […]