திருவொற்றியூர்: மிளகாய் பொடி தூவி நகைபறித்தவர் கைது

-->

திருவொற்றியூர். நவ. 29- திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே நகை கடையில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையன் கைது திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் பந்தாராம் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா என்ற நகைக்கடை உள்ளது. இந்த நகை கடையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மாலை 7 மணியளவில்தொப்பி போட்டு கொண்டு கடைக்கு வந்த மர்ம ஆசாமி ஒருவன் தங்க சங்கிலி வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் […]

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

-->

ராமேஸ்வரம், நவ.29:கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகை கப்பலை விட்டு மோதி மூழ்கடித்ததுடன், அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு அனுமதி இல்லை என எச்சரித்து மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர். உடனே இங்கிருந்து […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ வழக்குப்பதிவு

-->

தூத்துக்குடி, நவ.29: கடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்று சிபிஐ விசாரணை மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்தது. தூத்துக்குடி மாவட்ட […]

ஐதராபாத்: நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் படுகொலை

-->

ஐதராபாத்,நவ.29:ஐதராபாத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சாலையில் ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட காட்சிகள் வைரலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த அப்துல் காஜாவும், சகீர் குரேஷியும் ஆட்டோ ஓட்டுநர்கள். இவர்கள் இருவர் இடையே தொழில்ரீதியாக போட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு சகீர் குரேஷி மதினா குறுக்கு சாலையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அப்துல் காஜா, இறைச்சி வெட்டும் கத்தியை வைத்து சகீரை பல முறை குத்தினார். பின்னர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். அங்கு […]

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

-->

ஸ்ரீஹரிகோட்டா, நவ.29:ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து 31 செயற்கை கோள்களை சுமந்து கொண்டு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. 28 மணி நேர கவுண்டவுன் முடிவடைந்ததும், காலை 10 மணி அளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ தயாரித்த எச்ஒய்எஸ்ஐஎஸ் என்ற பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த ஒரு மைக்ரோ மற்றும், […]

டிச.4-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

-->

சென்னை, நவ.29:காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் […]

சென்னை: நடிகை தூக்கு போட்டு தற்கொலை

-->

சென்னை, நவ.29: தமிழ் திரைப்பட நடிகை ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தவர் நடிகை ரியாமிகா (வயது 26) . இவர் தமிழில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இந்நிலையில் நேற்று பிறபகல் வரை ரியாமிகாவின் அறைக்கதவு திறக்கப்படாமலேயே இருந்தது. இதனால் இவரது தம்பி பிரகாஷும், காதலர் தினேஷும் அறைக்கதவை தட்டினர். அறை திறக்கப்படாததால் […]

நெல்லை: காதலியை கத்தியால் குத்திசெய்த வாலிபர் கைது

-->

திருநெல்வேலி, நவ.28: பேச மறுத்த காதலியைக் கத்தியால் குத்திக்கொன்ற பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மெர்சி (வயது 23). இவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். திருக்குறுங்குடி மகிழடியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரியான ரவீந்திரனும் அதே பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ரவீந்திரன் வேலையிலிருந்து நின்றுவிட்டார். இந்த நிலையில், மெர்சி ரவீந்திர […]

மேகதாது: அனுமதியை திரும்ப பெற முதல்வர் கடிதம்

-->

சென்னை, நவ.28:  காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது பகுதியில் குடிநீர் பயன்பாட்டுக்கு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை […]

கஜா: நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு

-->

நாகை, நவ.28:நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவினர் நேற்று முதலமைச்சருடன் சென்னையில் ஆலோசனை நடத்தி சென்றனர். இதனைத் தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் காரைக்கால் விரைவு ரயில் மூலமாக இன்று காலை நாகை வந்தடைந்தார். தொடர்ந்து நாகை ஊராட்சி ஒன்றிய […]