தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

-->

சென்னை, டிச.24: இயேசுபிரான் பிறந்த இந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனி சாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- இரக்கத்தின் மறுவுருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவர்களுக்கு எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசுபிரான் […]

எம்.ஜி.ஆர் சமாதி: அதிமுக தலைவர்கள் அஞ்சலி

-->

சென்னை,டிச.24:எம்ஜிஆரின் 31-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் காலை 10.00 மணிக்கு எம்ஜிஆர் நினைவிடத்துக்கு வந்தனர். எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவி […]

திருப்பூர்: கிளி ஜோதிடர் வெட்டிப்படுகொலை

-->

திருப்பூர், டிச.24: திருப்பூரில் கிளி ஜோதிடர் ஒருவர் ஹெல்மெட் அணிந்த மர்ம நபரால் பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சாலை ஒன்றில் நடந்து சென்ற ஒருவரை பின் தொடர்ந்து வந்து இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிய அந்த நபரை அங்கிருந்த யாரும் பிடிக்கவோ, விரட்டவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொலை செய்த நபர் சில காகிதங்களை சாலையில் வீசிவிட்டுச் சென்றார். பட்டப்பகலில், பொதுமக்கள் […]

சென்னை: ஏர்போர்ட்டில் ஒன்றரை கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

-->

சென்னை, டிச.20:சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய ஏர்-இந்தியா விமான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வளைகுடாவிலிருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 7.50 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராக இறங்கி சென்றார்கள். கடைசியாக ஒரு பெண் பயணி வந்தார். அப்போது ஹசன் அலி (வயது 32) என்ற ஏர்-இந்தியா விமான ஊழியர் […]

வளசரவாக்கம்: ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.8 லட்சம் அபேஸ்

-->

சென்னை, டிச.20:வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ. 8லட்சம் பணத்தை அபேஸ் செய்து கொண்டு சென்று விட்டதாக அழகு நிலையத்தில் பணியாற்றிய பெண் மீ து அரசு ஓய்வு பெற்ற முதியவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-வளசரவாக்கம், சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 70). இ வர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள அழகு நிலையத்திற்கு […]

பேனர் : மு.க.ஸ்டாலின், ராமதாஸ் அறிக்கை

-->

திமுகவினர் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் இனி பேனர்கள் வைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சாலைகளில் பேனர்கள் வைப்பதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த பேனர்கள் தொடர்பாக தாக்கல் செய் யப்பட்ட பொதுநலன் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் […]

முதல்வரிடம் பாரதிராஜா,எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நேரில் மனு

-->

சென்னை, டிச.20: தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சங்கத்தேர்தலை 4 மாதத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை விஷால் எதிர் அணியினர் பாரதிராஜா தலைமையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் நேற்று தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இந்நிலையில், இயக்குனர், தயாரிப்பாளர் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான சுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், […]

சென்னை: நடிகர் விஷால் உட்பட 10 பேர் கைது

-->

சென்னை, டிச.20: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக கூறி விஷால் எதிர்தரப்பினர் நேற்று அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இந்நிலையில் அலுவலக பூட்டை திறக்க முயன்ற சங்கத்தின் தலைவர் விஷாலை போலீசார் கைது செய்தனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் உள்ளார். பதவியேற்றது முதல் விஷாலின் நடவடிக்கைகளுக்கு சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு சுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், அம்மா கிரியேஷன்ஸ் சிவா […]

குற்றச்சாட்டுகளுக்கு பொன்.மாணிக்கவேல் பதில் அளிக்கவேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

-->

சென்னை, டிச.20:சிலை கடத்தல் பிரிவு சிறப்பு போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் நேர்மையானவர் என்றால் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் சொல்ல வேண்டும் என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற பிறகும் அவரை இந்த பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.இந்நிலையில் அவருடன் பணியாற் றும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக டிஜிபி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளனர். அதில் பொன். மாணிக்கவேல் […]

ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரி நேரில் ஆஜர்

-->

சென்னை,டிச.20:ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று ஆணையத்தில் ஆஜராக வேண்டிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேறொரு நாளில் ஆணையத்தில் ஆஜராவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகள் தீபா, தீபக், ஜெலலிதா தோழி சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமை செயலாளர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இவர்களில் சிலரிடம் சசிகலா தரப்பு […]