தமிழகம்: 5.91 கோடி வாக்காளர்கள்

-->

சென்னை, ஜன.31: தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் படி, மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் உள்ளது. குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் ஆகும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து, இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் இந்த பட்டியலை வெளியிட்டார். […]

வாக்காளர் பட்டியல் வெளியீடு

-->

சென்னை, ஜன.31: சென்னை நகரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 92 ஆயிரம் என்று சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் இன்று வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு: இந்தமுறை பெண் வாக்களர்களே அதிகம் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள […]

ஸ்மார்ட் டஸ்ட்பின் : முதல்வர் துவக்கினார்

-->

சென்னை, ஜன.31: பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் சென்னையில் முதன் முறையாக ஸ்மார்ட் டஸ்ட்பின் பயன்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடுஞ உருவாக்கிட தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1.1.2019 முதல் தமிழ்நாட்டில் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது தமிழ்நாட்டு […]

ரெயிலில் இருந்து விழுந்து பெண்கள் காயம்

-->

தாம்பரம், ஜன.31:  பல்லாவரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வடமாநில சுற்றுலா பயணிகள் 3 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர். வடமாநிலத்தில் இருந்து 71 பேர் கொண்ட குழு ஒன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளது. அங்கு சுற்றுலாவை முடித்துக்கொண்டு, அடுத்ததாக சென்னையை சுற்றிப்பார்ப்பதற்காக பல்லாவரத்தில் அறையெடுத்து தங்கியிருந்துள்ளனர். அந்த வகையில் இந்த குழுவை சேர்ந்த சிலர் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு திரும்புவதற்காக இன்று காலை தாம்பரம்-பீச் செல்லும் மின்சார ரெயிலில் ஏறியுள்ளனர். பல்லாவரம் […]

ஜாக்டோ – ஜியோ போராட்டம்: 96% பேர் பணிக்கு திரும்பினர்

-->

சென்னை, ஜன.29: போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, 96% பேர் இன்று பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. […]

சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது

-->

சென்னை, ஜன.29: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,922-க்கும், பவுன் ரூ.23,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,696 விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.3,127 ஆனது. அதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டி, ரூ.25,016-க்கு விற்பனை ஆனது […]

சென்னை: 74 இடங்களில் வருமான வரி சோதனை

-->

சென்னை, ஜன.29: தொலைக்காட்சிகளில்  சின்னத்திரை, பெரியதிரை நடிகைகளுடன் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி விளம்பரப் படங்களில் நடித்த  சரவணனுக்கு சொந்தமான லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சரவணா ஸ்டோர், ரேவதி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்த கடைகளின் உரிமையாளர்களின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. ஜிஎஸ்டி மற்றும் வருமான […]

சென்னை: மனைவி கொலை – கணவன் தற்கொலை

-->

சென்னை, ஜன.23:சென்னையை அடுத்த புளியந்தோப்பில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறால் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் உரல் கல்லை போட்டு கொலை செய்து விட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-புளியந்தோப்பு மசூதி தெருவைச்சேர்ந்தவர் துர்காராம்(வயது 42). இவர் போரூரில் காலணி தைத்து விற்பனை செய்யும்க டை நடத்தி வந்தார்.இவரது மனைவி தாராபாய் (வயது 33). இவர்களுக்கு 9ம்வகுப்பு படிக்கும் சஞ்சாய் ராம் […]

விருகம்பாக்கம்: சினிமா துணை இயக்குனரிடம் வழிப்பறி

-->

சென்னை, ஜன.23:விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் சுனில்குமார் (வயது 24) என்பவரிடம் நேற்றிரவு விலை உயர்ந்த ஐபோன், 4 சவரன் தங்க செயின் ஆகியவற்றை 2 பேர் பறித்துச்சென்றனர். வடபழனியில் கவரைத்தெருவில் வசித்து வரும்பவர் சுனில்குமார் ( 24)  சினிமாவில் கலை துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். நேற்று மதுரவாயலில் வேலையை முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில்  உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார் அப்போது […]

நடிகர் ரஜினி இளைய மகள் திருமணம் பிப்.11 ம் தேதி

-->

சென்னை, ஜன.23: நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடியின் திருமணம் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டடது. இந்நிலையில் சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் கடந்த 6ம் தேதி முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து திருமண தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 11ம் தேதி […]