சென்னை: ஆம்புலன்ஸ் டிரைவர் குத்தி கொலை

-->

சென்னை, ஆக.15: அண்ணா நகரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பிய இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யன் (21) தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தவர்.  இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ, சாந்தி காலனி பேருந்து நிறுத்தம் அருகே  ஆதித்யன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, வேறு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், […]

காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன்: ராகுல்

-->

ஐதராபாத், ஆக.15: காங்கிரஸ் கட்சியை தாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். ஐதராபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், இது குறித்து பிரதமர் மோடி, ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், திருமணம் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் […]

தியாகிகள் ஓய்வு ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

-->

சென்னை, ஆக.15: சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். அவர் பேசியதாவது:- அரசால் நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இந்த […]

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

-->

சென்னை, ஆக.14: தூத்துக்குடி துப்பாக்கி சூடு  சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி  நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி […]

தி.நகர் துணிக்கடையில் புடவைகள் திருட்டு: ஆந்திர பெண்கள் 2 பேர் கைது

-->

  சென்னை, டிச.22: சென்னை, தியாகராயநகர், உஸ்மான் சாலையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளர் போல வந்து 16 புடவைகளை திருடிச் சென்றுவிட்டதாக, கடையின் மேலாளார் சேதுராமன் என்பவர் கடந்த 11 ம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் நடத்தினர். மேலும், அந்த துணிக்கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 பெண்கள் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்ததும், கடையிலிருந்து புடவைகளை திருடியதும் தெரியவந்தது. . இந்நிலையில், […]