ரயிலில் தவறவிட்ட மடிக்கணினி ஒரே மணி நேரத்தில் மீட்பு

-->

தருமபுரி, நவ.15 ரயிலில் ஐ.டி நிறுவன ஊழியர்  தவறவிட்ட மடிக்கணினியை போலீசார் ஒரு மணி நேரத்தில் மீட்டனர். தருமபுரியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (27).  பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யஷ்வந்த்பூரில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரயிலில் தருமபுரி வந்தார். அப்போது தன்னுடைய மடிக்கணினி மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய பையை மறதியாக ரயிலிலேயே விட்டுவிட்டு தருமபுரி ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். ரயில் புறப்பட்டுச் சென்ற பிறகு பையைத் தவற விட்டதை […]

பாலியல் தொழில்: ஒரு பெண் உட்பட 3 பேர் கைது. 3 பெண்கள் மீட்பு

-->

சென்னை, நவ.15 சென்னை வளசரவாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் பாலியல் தொழில் நடத்திய  ஒரு பெண் உட்பட 3 தரகர்கள் கைது. 3 பெண்கள் மீட்பு.   சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து […]

கோயம்பேடு: வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் சடலம் வீச்சு

-->

சென்னை, நவ.12 கோயம்பேடு கூவம் ஆற்றில் தலையில் காயத்துடன் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்து, சடலத்தை அங்கு வீசியிருக்கலாம் என  சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை, கோயம்பேடு ரயில் நகர் அருகே கூவம் ஆற்றில்  இன்று காலை வாலிபர் ஒருவர் தலையில் காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார், சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி […]

சூதாட்டம் : 23 பேர் கைது

-->

சென்னை, நவ.12   ஐஸ்அவுஸ் யானைக்குளம் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சூதாட்டம் நடப்பதாக ஐஸ் அவுஸ் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று  தனிப்படையினர், அந்த வீட்டை கண்காணித்தனர்,  அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும்,  அவர்கள் சூதாட பயன்படுத்திய ரூ.32,370/- மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்த  அண்ணன், தம்பி கைது

-->

  சென்னை, நவ.12 சென்னை எம்.கே.பி.நகர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சர்மாநகரில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் நேற்று  இரவு சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10.00 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்தில் இருதரப்பினரிடைய வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்த எம்.கே.பி நகர் போலீசார் அங்கு சென்று    விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 வாலிபர்கள், மண்டபத்திற்கு வெளியில் நின்றுக் கொண்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை கையால் தாக்கி […]

பேருந்து மோதி 2 பெண்கள் பலி

-->

சென்னை, நவ.12   சென்னையில் தனியார் பேருந்து மோதி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சென்னையை அடுத்த பள்ளிகரணை நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா ( வயது 35) தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார். அவரது பக்கத்துவீட்டை சேர்ந்தவர் கலையரசி (வயது 23) பி.இ. பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இருவரும் நேற்று மாலை வேளச்சேரியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் செலுத்த இரு சக்கர வாகனத்தில் சென்றனர். […]

குடியிருப்பவர்கள் பற்றிய தகவல்களை 15 நாட்களில் தெரிவிக்க காவல்துறை அறிவுறுத்தல்

-->

      சென்னை, நவ.12:   சென்னையில் வாடகைக்கு குடியிருப்போரை பற்றிய தகவல்களை, அந்த வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. குற்றங்களை தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக வசிக்கவும் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாடகை வீடுகளில் சமூக விரோதிகள்  தங்கி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இதனை தடுக்கும் விதத்தில் காவல் […]

தவணை முறையில் வீட்டுமனைகளை விற்பதாக ரூபாய் 1 கோடி மோசடி : ஒருவர் கைது

-->

சென்னை, நவ.11: சென்னை,  காரப்பாக்கத்தை சேர்ந்தவர் சௌஜன்யா (40),  இவர் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்களிடம் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் கொடுத்த புகாரில், தாம்பரத்தில் இயங்கி வந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் பாலமுருகன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம், குன்னத்தூர் கிராமம், ஸ்ரீகுபேரன் நகரில் வீட்டு மனைகளை லே-அவுட் போட்டு குறைந்த விலையிலும், தவணை முறையிலும் விற்பதாக கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து தான் 2014ம் ஆண்டு மனை பதிவு செய்து, ரூபாய் 1,50,000/- […]

சினிமா துணை நடிகை உடல் அழுகிய நிலையில் மீட்பு

-->

சென்னை, நவ.11-      மதுரவாயலில்  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சினிமா துணை நடிகை உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து  போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர் சபர்னா(29), இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில்  நடித்துள்ளார்.  தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் புதுக்கவிதை என்ற தொடரில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பூஜை, குடியரசு , காளை உள்ளிட்ட […]

500 ரூபாய் நோட்டை மாற்ற ரூ.50 கமிஷன் !

-->

சென்னை, நவ.11 500 ரூபாய் நோட்டை மாற்ற 50 ரூபாய் கமிஷன் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரே இரவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த்தையடுத்து அந்த நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் நேற்று கூட்டம் அலை மோதியது. இன்றும் அதே நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அவசரதேவைக்காக மாற்ற முயலும் நடுத்தர மக்களின் அவசர தேவையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு […]